யாழில் சீமெந்து கல் அரிந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். யாழ் கொழும்புத்துறை பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சு.சுதர்சன் (வயது29) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான்.
குறித்த இளைஞர் சீமெந்து கல் அரிந்து கொண்டிருந்தபோது, மின் வயரில் இருந்த ஒழுக்கினால் மின்சாரம் இயந்திரத்தை இயக்கியபோது இளைஞனை மின்சாரம் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.