யாழில் தனியார் பேருந்தை செலுத்திக் கொண்டிருந்த சாரதியின் மூக்கு வெட்டப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று (8) இரவு இடம்பெற்றது.
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பேருந்தின் சாரதி, நீர்வேலி கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் தாக்குதலுக்கு இலக்கானார்.
பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரே சாரதியின் மூக்கை அறுத்துள்ளார்.
சம்பவ இடத்தில் பயணிகளை இறக்குவதற்காக பேருந்து நிறுத்தப்பட்ட போது, பேருந்திற்குள்ளிருந்த அந்த இளைஞன், சாரதியின் மூக்கை அறுத்து விட்டு தப்பியோடினார்.
அங்கு ஏற்கனவே தயாராக இருந்த சிலர், அந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
காயமடைந்த சாரதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.