நேற்று 25,707 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன… வெளியான தகவல்!

நாடளாவிய ரீதியில் உள்ள தடுப்பூசி நிலையங்களில் நேற்று 25,707 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

17,111 பேருக்கு ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசிகளும் நேற்று வழங்கப்பட்டுள்ளன.

சினோபார்ம் முதலாவது தடுப்பூசியை 528 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 1,098 பேரும் பெற்றனர்.

ஃபைசர் முதலாவது தடுப்பூசியை 1,703 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 5,267 பேரும் பெற்றனர்.

7,367,404 பேர் இதுவரை மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.