வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் 11,12ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
எனினும் தற்போது நாட்டில் உள்ள கோவிட் இடர்நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பங்கேற்புடன் பெரு விழாவினை சிறப்பாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த பெருவிழா சிறப்பாக இடம்பெறுதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.