தென்கிழக்கு ஆபிரிக்க நாடொன்றில் பாரிய பண மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையர் உட்பட நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாலவி (Malawi) நாட்டில் பரிவர்த்தனை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி, சுமார் 310,000 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்ததுடன், 623,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணமோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லிலோங்வேயில் உள்ள நீதவான் நீதிமன்றம், மூன்று சீனர்கள் மற்றும் ஒரு இலங்கையர் மீது இரண்டு 500 மில்லியன் மலாவிய குவாச்சா நாணயத்திற்கும் அதிகமான பணமோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் 62 வயதான கன்கனிகே அனுர பியரடன அல்விஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அல்விஸ், மற்றொரு குற்றம் சுமத்தப்பட்டவருடன் சேர்ந்து, தென்கிழக்கு ஆபிரிக்க நாட்டின் பரிவர்த்தனை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி, பெருந்தொகை பணத்தை வெளிநாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்துள்ளார்.
2017ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2021ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் லிலோங்வே நகரத்தில் உள்ள மரினா கேசினோவில் 28,590,518.00 கினா நாணயத்தை சூதாட்ட பணமாக மாற்றியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குற்ற செயலின் வருமானத்திலிருந்து பெறப்பட்டதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.