மனதை கொய்த டாக்டர் பட நடிகை.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவர் டான் திரைப்படத்திலும் இவரே நடித்திருந்தார்.

டான் படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். டாக்டர் படத்திலும் அவர் தான் நடித்திருந்தார். இந்த டாக்டர் படத்துக்கு பின் பிரியங்கா அருள் மோகனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.


இந்நிலையில், நடிகை பிரியங்கா அருள் மோகன் நகைக்கடை விளம்பரத்துக்காக பட்டுப்புடவை மற்றும் நகைகள் அணிந்து டிரடிஷனல் லுக்கில் செம அழகாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.