யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறி திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார்.
அவரது நடவடிக்கை, நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் அடைந்து, அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன்படி தகவலின் பிரகாரம் குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன் போது குறித்த யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனை கண்டறிந்த பொலிஸார் , யுவதி காண்பித்த மாணவி அடையாள அட்டையும் போலியானது என கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து யுவதியை கைது செய்த பொலிஸார் , விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் யுவதியை முற்படுத்தியதை அடுத்து , நீதவான் யுவதியை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.