யாழில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்.புத்துார் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் மாசிலாமணி குகபிரசாசம் (வயது59), குகப்பிரகாசம் சுகுணா(வயது55) என்ற கணவன் மனைவியே உயிரிழந்துள்ளனர். இன்று நண்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில்,

உயிரிழந்த தம்பதிகளின் மகள், பல்கலைகழகத்திற்கு சென்றிருந்த நிலையில் பெற்றொருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தபோது அவர்கள அழைப்பு பதிலளிக்கவில்லை. இதனையடுத்து மகள் வீட்டுக்கு தேடி சென்ற நிலையில் பெற்றோர் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அயலவர்களை அழைத்த குறித்த மாணவி சம்பவம் தொடர்பாக தொியப்படுத்திய நிலையில் அயலவர்களின் தகவலின் படி, குறித்த மரணங்கள் சடலம் காணப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பாகவே நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நீர் இறைக்கும் இயந்திரத்தை (மோட்டரை) நேரடியாகவே இயக்கி அதில் மனைவி நீராடியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அதன்போது மின் கசிவு ஏற்பட்டு மனைவி மின் தாக்கி வீழ்ந்தபோது அவரைக் காப்பாற்றாச் சென்றே கணவனும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.