இந்தவாரம் பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் உள்ளே சென்றனர். இதில் முதல் வாரத்தில் சுரேஷ் தாத்தா, இரண்டாவதாக சுஜா வருணி, மூன்றாவதாக அபிநய் எலிமினேட் ஆனார்கள்.

அதன் பின்பு வனிதா தானாக வெளியேறியதால் நான்காவது யாரையும் வாரம் எலிமினேட் செய்யப்படவில்லை. பின்பு அடுத்த ஐந்தாவது வாரத்தில் தாடி பாலாஜி வெளியேற்றப்பட்டார்.

தற்போது இந்த வாரம் பாலா, ஜுலி, சினேகன், சுருதி ஆகியோர் நாமினேஷனில் இருக்கின்றனர். இதில் பாலாவும், ஜுலியும் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றனர்.

குறைந்த வாக்கு எண்ணிக்கையில் சுருதி, அவரைத் தொடர்ந்து கடைசியாக சினேகன் இருக்கின்றார். ஆதலால் இந்த வாரம் சினேகன் அல்டிமேட்டிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த நிகழ்ச்சியினை கமலைத் தொடர்ந்து சிம்பு தொகுத்து வழங்குவதால் அவரைக் காணவும் ரசிகர் பட்டாளம் காத்திருக்கின்றனர்.