சோகத்தில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு பிரபுதேவா அளித்த இன்ப அதிர்ச்சி!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடலுக்காக நடிகர் பிரபுதேவா அவரை பாராட்டியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் தனுஷுடனான பிரிவினைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றார். பயணி என்ற ஆல்பம் பாடலை உருவாக்கும் பணியில் சமீபத்தில் அதிக கவனம் செலுத்திவந்தார்.

தற்போது குறித்த பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பலரும் ஐஸ்வர்யாவை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவும் அவரைப் பாராட்டி காணொளி ஒனறினை வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளியினை தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட ஐஸ்வர்யா, பிரபுதேவாவினை அண்ணா என்று அழைத்து நன்றியும் தெரிவித்துள்ளார்.