நாட்டில் அதிகரிக்கப்போகும் அபாயம்

நாட்டில் டெங்கு அபாயம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக் கூடும் என சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் ஆய்வுகளின் மூலம் அதிகளவான நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலத்தில் அதிகரிக்கும் மழையினால் நாட்டில் நுளம்பு பெருக்கம் அதிகரிக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.