ரஷ்ய அதிபர் புடினை(Vladimir Putin) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) அறிவித்துள்ளார்.
ஜெருசலேம் நகரில் இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையை நடத்தலாம் என ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) தனது யோசனையை முன்வைத்துள்ளார்.
இதன்படி உக்ரைன் – ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை நாங்கள் தயார் என ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) அறிவிப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரு நாட்டு பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்(Naphtali Bennett) மத்தியஸ்தராக செயல்பட வேண்டும் என அவர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.