இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு அங்கு செல்ல வேண்டாம் என்று இங்கிலாந்து அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடியினால், எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.
அதுமாத்திரமல்லாது, பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பிரித்தானிய அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.
இது குறித்து பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசிடம் போதிய அளவிளான பணம் இல்லாமையால் அடிப்படை தேவைகளுக்கான பற்றாக்குறை அங்கு ஏற்றப்பட்டுள்ளது.
பலசரக்குக் கடைகள், மருத்துக்கடைகள், எரிபொருள் நிலையங்கள் போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகளும் வரிசைகளில் நிற்கவேண்டி வரும்.
அத்துடன் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படலாம். மேலும் டெங்கு மற்றும் கொரோன வைரஸ் பரவி வருவதால் விமான நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்றப்படலாம்.
அது மாத்திரமல்லது, இச்சூழ்நிலையினால், நாடு எந்நேரங்களிலும் முடக்கப்படலாம்” என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் போன்று தீவிரவாத தாக்குதல் இடம் பெறலாம் என இங்கிலாந்து அரசாங்கம் தமது சுற்றுலா பயணிகளுக்கான ஆலோசனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அடிப்படை தேவைக்கான பொருட்கள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக பாரிய பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது.
உணவு எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்ய நாட்டிடம் போதிய அளவு பணம் இல்லை, பொருட்களுக்காக கடைகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர், தொடர்ச்சியான மின்வெட்டு போன்ற பிரச்சினைகள் ஏற்ப்பட்டுள்ளது.
இவற்றை சாதகமா பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் மேற்றக்கொள்ளலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சுற்றுலாப்பயணிகள் ஒன்றுகூடும் இடங்களிலும் சுற்றுலாத்தலங்களிம் இடம் பெறலாம் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மதம் இடம் பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிர் இழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.