நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் அதனால் பெரிய அளவில் கவனிக்க படவில்லை . பின்பு அதே ஆண்டு “ஆப்பிள் பெண்ணே” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் கதாநாயகியானார். ஐஸ்வர்யா மேனன் தமிழ் , மலையாளம் , கன்னடம் மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா 2018-ம் ஆண்டு சி. எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வெளியான தமிழ் படம் 2 -ல் ஹீரோயினாக நடித்திருந்தார் . அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றிருந்தது . அதன் பின் 2020-ல் இவரது நடிப்பில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு பஞ்சமில்லாத இந்த நிலையில் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த ஐஸ்வர்யா மேனன் கூடிய விரைவில் தமிழ் படங்களில் வாப்புகளை அள்ள துடங்கிவிடுவார் என்று சினிமாவட்டாரம் கூறுகிறது. பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.
தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி தனது சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து ரசிகர்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பனிப்பிரதேத்தில் எடுத்த வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் ஜூரத்துக்கு ஆளாகி வருகிறார்.