நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையினை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் புகையிரத கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புகையிரத திணைக்களம் பேருந்து கட்டண அதிகரிப்புக்கு நிகராக புகையிரத கட்டணத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் இன்று முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 17 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.