திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி பூர்ணிமா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகியுள்ளது. ராஜேந்திரனுக்கு நிறைய பெண்களிடம் தொடர்பு இருந்தது.
இதை பூர்ணிமா தட்டி கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. அத்துடன் தொலைக்காட்சியில் எப்போதும் கார்ட்டூன் மட்டும் தான் பார்க்கவேண்டும். சினிமா, சீரியல் எதுவும் பார்க்க கூடாது என்று வீட்டில் இருப்பவர்களுக்கு அவர் கண்டிஷன் போட்டுள்ளார்.
தீவிர விஜய் ரசிகையான பூர்ணிமா கணவர் இல்லாத நேரத்தில், ஒரு நாள் விஜய் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று அப்போது ராஜேந்திரன் வீட்டிற்குள் வந்தவுடன் நடிகர் விஜயுடன் சேர்த்து வைத்து மிகவும் அவதூறாக பூர்ணிமாவை திட்டியுள்ளார்.
மேலும், தனது மகள்களையும் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது யாரிடமும் பேசக்கூடாது என்று ஆணாதிக்க தனமாக நடந்து கொண்டுள்ளார். அத்துடன் ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் வகுப்பு படிக்க கூட அந்தச் சிறுமிகளுக்கு செல்போன் வாங்கி தராமல் இருந்து வந்துள்ளார்.
இவரது கொடூர டார்ச்சரால் பூர்ணிமா இருமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் கடந்த 24ஆம் தேதி விவாகரத்து செய்யப் போவதாக கூறி பூர்ணிமாவிடம் ராஜேந்திரன் கையெழுத்துப் போடச் சொல்லி கேட்டுள்ளார். இதற்கு பூர்ணிமா மறுத்ததால் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதை தடுப்பதற்காக அவர்களுடைய மூத்த மகள் வந்திருக்கிறார். அவரை அடித்து உதைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். பின்னர் தானே சென்று மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தன் சொந்த மகளிடம் அவதூறாக பேசி தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தால் அவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.