கழுகு ஒன்று இரையாக குழந்தையை தூக்கி செல்ல முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பதற வைத்து வருகின்றது.
இன்ஸ்டாகிராமில் nature27_12 என்ற பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில் ஒரு பார்க்கில் தன் குழந்தையுடன் வந்த தந்தை குழந்தையை பார்க்கில் அமர வைத்து விட்டு அவர் கொண்டு வந்த பேக்கில் தான் கொண்டு வந்த ஏதோ பொருளை எடுக்க சென்றிருந்தார்.
View this post on Instagram
அப்பொழுது அவர் குழந்தையை தனியாக விட்டிருந்தார். இந்த நேரம் பார்த்து அங்கு வந்த கழுகு குழந்தையை தூக்கி செல்ல முயன்று குழந்தையை ஆடையை தன் காலால் கொத்தி தூக்கி சென்றது.
குழந்தையை சற்று உயரத்திற்கு கொண்டு சென்ற பின்பு குழந்தையை எடை தாங்க முடியாமல் கீழே போட்டுள்ளது.