அதிகரிக்கப்பட்டது கோழி இறைச்சியின் விலை!

நாட்டில் தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 -900 ரூபா வரைக்கும், ஒரு முட்டையின் விலை விலை 30 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக இலங்கையில் கோழிப்பண்ணை தொழில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இவ்வாறு கோழி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.

கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களின் பற்றாக்குறையே தாம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.