கிர்ணி பழத்தின் வாசனை பலருக்கும் பிடிப்பதில்லை என்றாலும், இந்த பழத்தின் ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதியில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்து கொண்டால், அதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புவீர்கள்.
ஜூஸ் நிறைந்த கிர்ணி பழம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவர்களிடையே புகழ் பெற்றிருக்கிறது. இதன் மூலம் அழகான சருமமும் கிடைக்கும், பார்வைத்திறனும் மேம்படும். கோடையில் உண்பதற்கு ஏற்ற உணவு இது.
கிர்ணி பழத்தின் வாசனை பலருக்கும் பிடிப்பதில்லை என்றாலும், இந்த பழத்தின் ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதியில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்து கொண்டால், அதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புவீர்கள்.
கிர்ணி பழங்களில், வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன. அமெரிக்காவின் கான்சாஸ் ஸ்டேட் யூனிவர்சிட்டியின் ஊட்டச்சத்து துறை 2003-ம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில், சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை, வைட்டமின் ஏ மூலம் ஓரளவு சீர்செய்ய முடியும் என்று கண்டறிந்தார்கள்.
இதில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதை கட்டுப்படுத்தவும் கிர்ணி பழம் உதவுகிறது. மிகமிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது. இதன் ஜூஸ் நிறைந்த சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் தினசரி உணவில், கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக்கொள்வதால், வயிற்று கோளாறுகளை குறைக்க முடியும்.
எச்சரிக்கை
வெட்டிய உடனே கிர்ணி பழத்தை சாப்பிட்டுவிட வேண்டும். பழத்தை வெட்டி வைத்து, அப்படியே விட்டு விட்டீர்கள் என்றால், அதன் ஊட்டச்சத்துக்கள் ஆக்சிஜனிறக்கம் அடைந்து விடும். இதனால் பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும்.