ஆப்பிள் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்..!!!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் பயனர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் பயனர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபோன் மற்றும் ஐபேட்டுகளுக்கு ஐஓஎஸ் 15.4 அப்டேட்டை வெளியிட்டது. ஆனால் இந்த அப்டேட்டை நிறுவிய ஸ்மார்ட்போன்களில் வேகமாக சார்ஜ் குறையும் பேட்டரி பிரச்சனை எழுந்தது.

பயனர்கள் முழுதாக சார்ஜ் செய்தாலும் 20 நிமிடங்களில் முழு சார்ஜும் இறங்கிவிடும் வகையில் இந்த அப்டேட்டில் பிரச்சனை இருப்பதாக ட்விட்டரில் புகார் செய்தனர். இதற்கு ஆப்பிள் தரப்பில் பதில் எதுவும் அளிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த பிரச்சனையை சரி செய்து ஆப்பிள் புதிய ஐஓஎஸ் 15.4.1 மற்றும் ஐபேட் ஓஎஸ் 15.4.1 என்ற இரண்டு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டுகளில் இதற்கு முன் நிலவி வந்த பேட்டரி பிரச்சனைகள் சரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுத்தவிர இந்த புதிய அப்டேட்டின் மூலம் பிரைலி சாதனங்களில் நிறுவி வந்த பிரச்சனைகளும் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஆப்பிள் ஹோம்போட் 15.4.1 என்ற புதிய அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. இதின் மூலம் அப்பிளின் ‘சிரி’ அம்சத்தில் உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் பயனர்களுக்கு வாட்ச் ஓஎஸ் 8.5.1 சிறிய அப்டேட்டை ஆப்பிள் வெளியிட்டுள்ளது. இது பாதுகாப்பு பிரச்சனைகள் சிலவற்றை சரி செய்யும் என கூறப்படுகிறது. அதேபோல மேக் பயனர்கள் இதுவரை சந்தித்து வந்த ப்ளூடூத் மற்றும் எக்ஸ்டர்னல் டிஸ்பிளே கனெக்‌ஷன் பிரச்சனைகளை சரி செய்ய மேக் ஓஎஸ் மோண்டெரே 12.3.1 அப்டேட்டையும் ஆப்பிள் வெளியிட்டுள்ளது.