சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் (01-04-2022) மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவில் வேளையில் நோயாளிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் அமுலப்படுத்தப்படும் மின்துண்டிப்பின் அடிப்படையில் நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்ட சமயத்தில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி பழுதடைந்ததுள்ளது.
இதனால் நேற்று இரவு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின்சாரம் இருக்கவில்லை. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.