தன்னுடைய மகள் போஷிகாவை மனைவி நித்யாவிடம் இருந்து மீட்டு தரும்படி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் பிரபல நடிகர் தாடி பாலாஜி புகார் அளித்துள்ளார்.
வெள்ளத்திரை மற்றும் சின்னத்திரைகளில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தாடி பாலாஜி, இவரது மனைவி நித்யா, இவர்களுக்கு போஷிகா என்ற மகள் இருக்கிறாள்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கொடுத்து கொண்டே உள்ளனர்.
பிக்பாஸில் ஒன்று சேர்ந்தார்களா?
இந்நிலையில் இருவரும் ஒன்றாக பிக்பாஸில் கலந்து கொண்டனர், அந்த வீட்டுக்குள்ளேயும் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஆனது.
ஆனால் கமல் தலையீட்டின் கீழ் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழப்போவது போன்று தெரிவித்தனர்.
இருப்பினும் வெளியே வந்ததும் மறுபடியும் பிரச்சனை எழ பிரிந்து வாழ்ந்தனர்.
குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதாகவும், தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் நித்யா புகார் அளித்தார்.
இப்படி பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்க தன் மகளை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார் தாடி பாலாஜி.
மிரட்டி பணம் பறிக்கிறார்
இதுதொடர்பில் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, நானும் என் மனைவியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டோம், என் மகள் போஷிகா மனைவி பராமரிப்பில் உள்ளதார்.
ஆனால் சமீபகாலமாக மகளை பள்ளிக்கு அனுப்பி விடாமல், தவறான வழிகாட்டுதலால் மகளை வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் நித்யா ஈடுபட்டுள்ளார்.
மகளின் எதிர்காலத்தை கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறாக பேச வைக்கிறார், எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.