சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும் கோல்டு காபி. ஹோட்டலில் மட்டுமே கிடைக்கும் இந்த கோல்டு காபியை வீட்டில் எளிய முறையில் செய்யலாம் வாங்க…
தேவையான பொருட்கள்
பால் – 100 மில்லி
இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
வெனிலா ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப்
சாக்லேட் சிரப் – 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இன்ஸ்டன்ட் காபி பொடியில், சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பாலை காய்ச்சி, ஆற வைத்து, குளிர வைக்கவும்.
குளிர்ந்த பாலில், காபி, வெனிலா ஐஸ்கிரீம், சாக்லேட் சிரப், சர்க்கரை சேர்த்து மிக்சியில் நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும்.
காபி கலவையை டம்ளரில் ஊற்றி, மேலே நுரையை போட்டு, சிறிது இன்ஸ்டன்ட் காபி துாள் துாவி, கோல்டு காபியை பரிமாறவும்.