சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது வரை பரவிக்கொண்டே தான் இருக்கிறது. என்னதான் தடுப்பூசி வந்து இதனைக்கட்டுக்குள் வைத்தாலும், 4வது அலை 5வது அலை என பல நாடுகளில் மீண்டும் பரவ தொடங்குகிறது.
புதிய வகை வைரஸ்
இந்நிலையில், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள இந்த கொரோனா எக்ஸ்இ (XE) என்று அழைக்கப்படுகிறது. ஒமைக்ரானை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஒமைக்ரான் வைரசின் BA 1 மற்றும் BA 2- திரிபுகளில் இருந்து உருமாற்றம் அடைந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 637 பேருக்கு இந்த வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
அதே சமயம் வேறு எந்த நாட்டிலும் இந்த புதிய வகை கொரோனா கண்டறியப்படவில்லை.