தம்பி மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து தீவைத்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், மலையூர் அடுத்த வலசு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் . இவருக்கு திருமணமாகி அஞ்சலை என்ற மனைவியும் பெண் குழந்தையும் உள்ளது. சிவகுமாரின் அண்னன் கருப்பையா என்பவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், அஞ்சலை கால்நடைகளை மேய்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த கருப்பையா அஞ்சலையுடன் தவறான முறையில் நடக்க முயன்றுள்ளார். அதற்கு அஞ்சலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அவர் அஞ்சலை மற்றும் அவரது குழந்தையை அரிவாளால் வெட்டி படுகொலை செய்ததோடு எரித்தாக கூறப்படுகிறது. புகைவருவதை கண்டு ஆதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கருப்பையாவை கைது செய்தனர், இந்டஹ் சம்ம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது