சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம்! 40 நாட்களில் நடக்கும் அதிசயம்

இன்றைய சூழலில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை பெரும்பாலானவர்களை தாக்கும் நோயாக மாறிக்கொண்டிருக்கிறது நீரிழிவு எனும் சர்க்கரை நோய்.

இதற்காக பலரும் பல்வேறு மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த ஆயுர்வேத முறையை பின்பற்றுவதே சிறந்ததாக கருதப்படுகிறது.

அப்படி 2000 ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் மூலிகை தான் சிறுகுறிஞ்சான், கசப்புத்தன்மையுடன் வேலிகளில் கொடியாக படரும் இதன் இலை சிறியதாகவும் முனை கூர்மையாகவும் இருக்கும்.

மலைப்பிரதேசங்களில் அதிகம் காணப்படும் இந்த மூலிகையின் செடி முழுவதுமே மருத்துவ குணங்களை கொண்டது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த

சிறுகுறிஞ்சான் இலைகள் அத்துடன் சம எடை அளவு நாவற்கொட்டைகள் எடுத்து இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து, தூளாக்கி, சலித்து, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு 1 டீஸ்பூன் அளவு தூளை வாயில் போட்டுக் கொண்டு வெந்நீர் அருந்தி வர வேண்டும்.

இதை தொடர்ந்து 40 நாட்கள் வரை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ஆஸ்துமா குணமாக

ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீரவும், சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை மற்றும் மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள், அத்துடன் திரி கடுகு சூரணம் ஒரு சிட்டிகை கலந்து வாயில் போட்டு, வெந்நீர் குடித்து வர வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் 7 நாட்கள் வரை செய்ய நல்ல குணம் தெரியும்.

மாதவிலக்கு சரியாக

மாதவிலக்கு சரியாக ஏற்பட ஒரு கைப்பிடி சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 2 கைப்பிடி அளவு களா இலைகள் சேர்த்து, நன்றாக மைய அரைத்து, பசையாக்கி, தினமும் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் ஒரு நாள் மட்டும் உட்கொள்ள மாதவிலக்கு குறைபாடுகள் நீங்கும்.

நரம்புகள் வலுவாக

மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் சாப்பிடுவதால் நரம்புகள் தளர்ந்து நரம்புத்தளர்ச்சி, வாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன.

சிறுகுறிஞ்சான் இலைகளை பொடி செய்து, பசும்பாலில் கலந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் வலிமை பெற்று நரம்புத் தளர்ச்சி போன்ற குறைபாடுகளை நீக்குகிறது.

குறிப்பு- சிறுகுறிஞ்சான் மூலிகையில் முக்கியமானவை என்றாலும் அதை மருத்துவரின் அறிவுரையுடன் எடுப்பது பாதுகாப்பானது.