200 மீட்டர் உயரத்திற்கு பறந்த கார்.. படப்பிடிப்பு என தெரியாமல் பதறிய மக்கள்

நாகர்ஜுனாவின் படப்பிடிப்பு
நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

நீலகிரியில் பிரபலமான தேயிலைத் தோட்டத்தில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் மக்களுக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது.

200 மீட்டர் அளவுகு பறந்த கார்
ஆம், பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் உயரத்திற்கு பறந்து வந்து தேயிலைத் தோட்டத்தில் விழுந்தது.

அதை பார்த்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரத்தில் அது திரைப்படத்திற்கான சண்டைக் காட்சி என தெரியவந்ததால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.