அஜித் ரசிகர் மன்றத்தை கலைக்க இதுதான் உண்மையான காரணம்.!!

அஜித் அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார்.

அஜித் ரசிகர் மன்றம்
நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்கு முன் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால், அதற்கு என்ன காரணம் என்பதை நமக்கு தெரியாது.

இந்நிலையில், முதல் முறையாக அதன் காரணம் வெளிவந்துள்ளது. திருப்பதி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் பேரரசிடம், ரசிகர் மன்றத்தை கலைத்தது குறித்து கூறியுள்ளார்.

இதுதான் காரணம்
அவர் கூறியதாவது : ” நான் ஒரு நடிகன், என்னை பிடித்தால் நான் நடிக்கும் படங்களை வந்து திரையரங்கில் பார்க்கட்டும். ஆனால் ரசிகர்கள் மன்றம் என்ற பெயரில், அவர்களின் வாழ்க்கையையும் நேரத்தையும் நான் வீணடிக்க விரும்பவில்லை ரசிகர்களை திசை திருப்ப விரும்பவில்லை “.

மேலும் ” ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பினால் அவர்களது சொந்த வேலைகளையும் வாழ்க்கை இலட்சியத்தையும் விட்டு விட்டு எனக்காக நேரத்தை செலவிடுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ரசிகர்களின் வாழ்க்கை ரொம்பவும் முக்கியம் எனவேதான் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டேன் ” என்று கூறியுள்ளாராம்.