நீரிழிவு நோயாளி தினமும் ஒரே ஒரு துண்டு பச்சை வெங்காயம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்களை பழங்காலந்தொட்டே நம்முடைய முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த வெங்காயத்தை தினமும் சிறிதளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.

அவை என்னென்ன என்று தெரிந்து கொண்டு, தினசரி பச்சையாக சிறிது வெங்காயத்தை சாப்பிடத் துவங்குவோம். வெங்காயத்தில் மிக அதிக அளவில் பிளவனாய்டுகள் இருக்கின்றன.

இவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகின்றன.

அதேபோல வெங்காயத்தில் உள்ள தியோசல்ஃபினேட்டுகள் உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருப்பதுடன் ரத்தம் உறையாமல் பார்த்துக் கொள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆகிய ஆபத்துக்களில் இருந்து தடுக்கிறது. ஒரு சிறிய கப் பச்சை வெங்காயம் தினமும் சாப்பிட்டால், பெரியவர்களுக்கு ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் சி- யில் 13.11 சதவீதம் இந்த வெங்காயத்திலிருந்து கிடைக்கும்.

இதிலுள்ள வைட்டமின்களும் ஆனடி-ஆக்சிடண்ட்டுகளும் உடலில் உள்ள ஃப்ரீ-ரேடிக்கல்ஸை அழித்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆற்றலைத் தரும்.

உடல் பருமனைக் குறைக்கும் போன்ற பல காரணங்களால் ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நிறைந்த உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுகிறோம்.

க்ரீன் டீ குடிக்கிறோம். ஆனால் நம்முடைய வீட்டில் எப்போதும் இருக்கும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டாலே அதில் இவை எல்லாவற்றையும் விட அதிகமாக ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன என்பது தெரியாமல் இருக்கிறோம்.

சொல்லப்போனால் வெவ்வேறு வகையான 25 க்கும் மேற்பட்ட பிளவனாய்டு ஆன்டி-ஆக்சிடணட்டுகள் வெங்காயத்தில் இருக்கின்றன.

வைட்டமின் சி அதிகமுள்ள ஓர் உணவு தான் வெங்காயம்.

கொலாஜன் உற்பத்தியை நிர்வகிப்பவும் உற்பத்தி செய்யவும் வெங்காயம் உதவியாக இருக்கிறது. அதனால் தலைமுடி மற்றும் சருமத்துக்கு நல்ல பொலிவைத் தருகிறது.

வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடுவதோடு அதன் சாறை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து வர, தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

நீரிழிவு நோயாளிகள் பச்சை வெங்காயம் சாப்பிட்டாலாமா?
வெங்காயத்தில் மிக அதிக அளவில் நார்ச்சத்தும் புரோபயோடிக்ஸ் நிறைந்திருக்கிறது. அதேபோல இதிலுள்ள ப்ரீ-பயாடிக்ஸ் இன்சுலின் சுரப்பை முறைப்படுத்தி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்வதோடு வயிறு ஆரோக்கியம் மேம்படுவதோடு நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கச் செய்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.