வலிமை படத்தை தொடர்ந்து அஜித் – எச். வினோத் கூட்டணியில் மீண்டும் உருவாகவுள்ள திரைப்படம் AK 61.
மீண்டும் இணையும் கூட்டணி
நேர்கொண்ட பார்வை, வலிமை என தொடர் வெற்றிக்கு பிறகு அஜித் – எச். வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணி மீண்டும் AK 61 படத்திற்காக அமைந்துள்ளது.
வலிமை படத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Professor-ராக அஜித்
இந்நிலையில், இப்படத்தில் அஜித் professor -ஆகவும் கவின் மாணவனாகவும் நடிக்கவுள்ளார்கள் என்று சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.