நடிகர் வினய்
தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களில் தற்போது கலக்கி வருபவர் நடிகர் வினய்.
இவர் முதன் முதலில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கி இருந்தாலும், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி வில்லனாக மாறியுள்ளார்.
இந்நிலையில், வினய்க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம்
அதன்படி, பிரபல நடிகை விமலா ராமும் நடிகர் வினய்யும் காதலித்து வருகிறார்களாம்.
மேலும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக அந்த தகவலில் தெரிவித்துள்ளனர்.
நடிகை விமலா ராமன் தமிழில் வெளிவந்த ராமன் தேடிய சீதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.