பல் மருத்துவராக மாறிய சூப்பர் சிங்கர் பிரியங்கா!

சூப்பர் சிங்கர் ஷோவில் கலந்துகொண்ட பலரும் தற்போது பாடகர்களாக இருக்கிறார்கள். திரைப்படங்களிலும் அவர்களுக்கு வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது.

பிரியங்கா
விஜய் டிவி நடத்தும் இந்த சூப்பர் சிங்கர் ஷோவில் கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் பிரியங்கா. அவரது மெலோடியான குரலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பல ஹிட் பாடல்களை அவரது குரலில் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

பல் மருத்துவர்
தற்போது பிரியங்கா பாடுவதை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு தற்போது பல் மருத்துவராக பணி செய்து வருகிறார். அவர் இதற்கு முன்பே தான் மருத்துவம் படித்து முடித்த ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார்.

தற்போது அவர் ஹாஸ்பிடலில் நோயாளி ஒருவருக்கு பல் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதோ..