பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே பல வருடங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில் தொடர்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, தற்போது சூப்பர் சிங்கர் 8 ஜூனியர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா மற்றும் மா.கா.பா-விற்காகவே அந்த நிகழ்ச்சியை பார்க்கும் பெரிய பார்வையாளர்கள் கூட்டமே உள்ளது. மேலும் பிரியங்கா சமீபத்தில் கூட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற பிரியங்கா ரன்னராகவும் ஆனார்.
விஜய் டெலீவிஸின் அவார்ட்ஸ்
இந்நிலையில் சமீபத்தில் இந்த வருடத்திற்கான விஜய் டெலீவிஸின் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரியங்காவிற்கு சிறந்த தொகுப்பாளினிகான விருது வழங்கப்பட்டு உள்ளது. இது தான் தற்போது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்து பின் சில நாட்கள் ஓய்வெடுத்த பின்பே பிரியங்கா சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கினார். அப்படி இருந்த பிரியங்காவிற்கு எப்படி சிறந்த தொகுப்பாளினி விருது வழங்க முடியும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.