ஆண்கள் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

ஆயுர்வேதம் காலையில் வெறும் வயிற்றில் எந்தவித பழங்களையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்துகிறது.

ஆனால், வாழைப்பழத்தை காலை நேர உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

உடலுக்குப் போதிய ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கக் கூடியது.

எனினும், வெறும் வயிற்றில் தனிளாக வாழைப்பழங்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

நன்மைகள்

  1. வாழைப்பழம் சாப்பிட்டால் ன்ஸ்டண்ட் எனர்ஜி கிடைக்கும். ஆனால் அந்த புத்துணர்ச்சியும் ஆற்றலும் தற்காலிகமானது.
  2. அதில் உள்ள மாவுச்சத்து உங்களுக்கு உடனடி ஆற்றலைக் கொடுத்தாலும் அதிலுள்ள அதிகப்படியான சர்க்கரை அடுத்த மணி நேரங்களில் உங்களுடைய உடலிலுள்ள எனர்ஜியை உறிஞ்சி எடுத்து விடும்.
  3. வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
  4. அனீமியா என்னும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் பல்வேறு நன்மைகளைச் செய்கிறது.
  5. இதிலுள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
  6. ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
  7. வாழைப்பழத்தை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு சருமம் பளபளப்படையும். தலைமுடியை மென்மையாக்கவும் வாழைப்பழத்தை முட்டையின் வெள்ளைக்கருவோடு சேர்த்து மாஸ்க்காகப் பயன்படுத்தலாம்.

    வாழைப்பழத்தில் உள்ள ​ஊட்டச்சத்துக்கள்

    வாழைப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி6, கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன.

    ஒரு வாழைப்பழத்தில் கிட்டதட்ட 25 சதவீதம் சர்க்கரைச் சத்தும் 30 சதவீதத்துக்கும் மேல் மாவுச் சத்தும் இருக்கின்றன.

    அதோடு ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் 89 கலோரிகள் இருக்கின்றன.

    முடிவு

    வாழைப்பழம் ஆரோக்கியமான ஒரு உணவு. அதனை வெறும் வயிற்றில் எடுத்து கொள்வதற்கு பதிலாக காலை உணவுக்கு பின் எடுத்து கொள்வதால் ழுமு பலன்களையும் பெற்றிடலாம்.