விஜய் டிவியின் மௌன ராகம் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. அதில் வருண் மற்றும் சத்யா இருவருக்கும் நடுவில் பிரச்னையை உண்டாக்க வில்லி ஸ்ருதி செய்த விஷயம் தான் பெரிய பிரச்னையாக வெடித்து இருக்கிறது.
உண்மையை போட்டுடைத்த வில்லி
சத்யா மற்றும் தருண் இருவரும் காதலித்து இருக்கிறார்கள், என்கிற உண்மையை வருணிடம் சொல்லிவிடுவேன் என ஸ்ருதி தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் அதை நானே சொல்லி விடுகிறேன் என தருண் கூறுகிறார்.
ஆனால் அதையும் விடமாட்டேன் என கூறும் சுருதி நேராக அணைத்து உண்மையையும் சொல்லிவிடுகிறார்.
பிரியும் ஜோடி
சுருதி இப்படி செய்ததால் வருண் மனமுடைகிறார். அவர் ரூமில் இருக்கும்போது திடீரென கரெண்ட் கட் ஆகிறது. அப்போது யாரோ மெழுகுவர்த்தி ஏற்ற அவர் அதை பார்த்து அலறி துடிக்கிறார்.
இது ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது. வில்லி செய்த காரியத்தால் சத்யா – வருண் ஜோடி பிரியப்போகிறார்களா எனரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.