உக்ரைனை சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் தற்போது நிலையில்லாத சூழல் நிலவுவதால் ஐடி துறையினருக்கு இந்தியாதான் பாதுகாப்பான நாடு என பலர் கருதுகின்றனர்.
ரஷியா- உக்ரைன் போர் சுமார் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதனால் ரஷியா மற்றும் உக்ரைனில் இயங்கி வந்த பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்கின்றனர்.
இந்நிலையில் ஐடி துறையில் சுமார் 55,000 முதல் 65,000 வரையிலான வேலைவாய்ப்புகள் இந்தியாவிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வேலைவாய்ப்புகள் தற்காலிகமாகவும், சில வேலைவாய்ப்புகள் நிரந்தரமாகவும் இந்தியாவுக்கு மாற்றப்படவுள்ளன.
இதுகுறித்து ஹெச்.ஆர் நிறுவனங்கள் கூறுகையில், பேக் ஆஃபிஸ் செயல்பாடுகள், பகிரப்பட்ட சேவைகள், தீர்வு மற்றும் பராமரிப்பு சார்ந்த சேவைகள், குறைந்த, நடுத்தர நிலையிலான ஆய்வு மற்றும்
மேம்பாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு மாற்றப்படுகின்றன.
இந்தியாவை தவிர உக்ரைனின் அண்மை நாடுகளான குரோட்ஷியா, பல்கேரியா, பெலாரஸ், ரொமானிஉயா, போலாந்து ஆகிய நாடுகளுக்கும் பல நிறுவனங்கள் இடம்பெயர்கின்றன.
ஆனாலும் உக்ரைனை சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் தற்போது நிலையில்லாத சூழல் நிலவுவதால் ஐடி துறையினருக்கு இந்தியா தான் பாதுகாப்பான நாடாக பலர் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புகள் இந்தியார்களுக்கு பெரும் அளவில் பயனளிக்கும் என கூறப்படுகிறது.