அனைத்து கணக்குகளும் சரிபார்க்கப்படும்- கூ செயலி வெளியிட்ட அறிவிப்பு

தகவல் தொழில்நுட்ப விதி 4(7)-க்கு கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ‘கூ’ என்ற சமூக இணையதளம் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ட்விட்டர் போன்ற மைக்ரோ பிளாகிங் தளமாக செயல்படும் கூ செயலி ’சுய சரிபார்ப்பு’ என்ற செயல்பாட்டினை தொடங்கியுள்ளது.

இதன்படி கூ பயனர்கள் அரசாங்க அடையாள அட்டை அல்லது ஆதார் எண்ணை கொடுத்து தங்கள் அடையாளத்தை உறுதி செய்துகொள்ள முடியும். இவ்வாறு சரிபார்க்கப்பட்ட கணக்குகளின் பக்கத்தில் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் வருவது போன்ற பச்சை நிற டிக் தரப்படும்.

இந்த சரிபார்ப்புக்காக தரப்படும் ஆதார் எண், 3-வது நபர் சேவையை கொண்டே சரிபார்க்கப்படும். மேலும் வழங்கப்பட்ட பயனர்களின் தகவல்கள் சேகரிக்கப்படாது. ஓடிபிக்காக மட்டுமே ஆதார் எண்கள் கேட்கப்படும் என கூ செயலி தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப விதி 4(7)-க்கு கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூ கணக்கை சரிபார்க்க நாம் செய்ய வேண்டியது:

கூ செயலிக்கு சென்று, ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்லவும். அதில் “Self Verify”-ஐ கிளிக் செயவும்.

இதில் 12 டிஜிட் ஆதார் எண்ணை டைப் செய்யவும்.

இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட போனுக்கு வரும் ஓடிபியை டைப் செய்தால் கூ செயலி சரிபார்ப்பு முடிந்துவிடும்.