ஆரஞ்சு பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
சாதாரணமாகவே ஆரஞ்சுப் பழத்தை ஜுஸ் போட்டுக் குடிக்கவோ அல்லது சுவையாக அதன் சுளையைச் சாப்பிடவோ தான் பயன்படுத்துவோம்.
ஆனால் அதன் தோலைக் கண்டு கொள்ள மாட்டோம்.
ஊட்டச்சத்துக்கள்
இந்த தோலிலுள்ள மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றது.
ஆரஞ்சுப் பழத்தின் தோலில் கொழுப்புகளைக் குறைக்கும் அத்தனை குணங்களும் நிரம்பியுள்ளன.
இந்த சத்துக்களைக் கொண்டு நமது உடலிலுள்ள LDL அல்லது ‘மோசமான’ கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்த்திட முடியும்.
எனவே, உங்களுடைய உணவில் ஆரஞ்சுப் பழத்தின் தோலை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கொழுப்புகளை ஓட ஓட விரட்ட முடியும்.
ஆரஞ்சு தோலை பயன்படுத்தி தயாரிக்கும் டீயில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகின்றன. இதில் நிறைய பெக்டின் காணப்படுவதால் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்
அரை ஆரஞ்சு பழத்தின் தோல் சிறிதளவு
தண்ணீர் – 1 1/2 கப்
இலவங்கப்பட்டை – 1/2 அங்குலம்
கிராம்பு – 3 பச்சை
ஏலக்காய் – 2
வெல்லம் – 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் வையுங்கள்.
இப்பொழுது ஆரஞ்சு தோல், இலவங்கப்பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய் சேர்த்துக் 10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
பிறகு அடுப்பை அணைத்து டீயை வடிகட்டி அதில் வெல்லம் சேர்த்து குடியுங்கள்.
இப்பொழுது சூப்பரான ஆரஞ்சு டீ தயாராகி விட்டது.
இதனை வாரம் இரண்டு முறை எடுத்து கொண்டாலே எடையில் நல்ல மற்றம் தெரியும்.