வெளியே கத்தை கத்தையாக புழக்கத்தில் காணப்படும் இலங்கை நாணயத்தை மீண்டும் வங்கிகளுக்குள் (deposits) ஆக எடுக்கும் ஒரு முயற்சியாகவே மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளது.
அதன்படி நிலையான வைப்பு வசதி வீதத்தை 13.50% ஆகவும், நிலையான கடன் வசதி வீதத்தை 14.50% ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட் டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்காகவே வைப்புக்கான வட்டி 13 வீதமாகவும், கடனுக்கான வட்டி 14% ஆகவும் மத்திய வங்கியால் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கை ரூபாயின் பெறுமதியிழப்பை ஈடுசெய்ய சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருக்கக்கூடிய பரிந்துரைகளில் முதன்மையானதாக இதுவே இருக்கமுடியும் என ஆர்லர்கள் கூறியுள்ளனர்.
வெளியே கத்தை கத்தையாக புழக்கத்தில் காணப்படும் இலங்கை நாணயத்தை மீண்டும் வங்கிகளுக்குள் (deposits) ஆக எடுக்கும் ஒரு முயற்சிவே இது உள்ளதாகவும், புதிய மத்திய வங்கி வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் தரமான செய்கை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.