தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழும் வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதனிடையே, இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயண், மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் சஞ்சனா சிங்-ம் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தில் வடிவேலுவுடன் விஜய் டிவி பிரபலம் ஷிவாங்கி இருக்கிறார். மேலும் அந்த புகைப்படத்தில் டாக்டர், பீஸ்ட் பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஷ்லியும் இருக்கிறார்.