நிமோனியாவை வீட்டிலேயே குணப்படுத்துவது எவ்வாறு தெரியுமா?

நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் கடும் தொற்று நோயாகும், இது உங்கள் நுரையீரல்களில் ஒன்று அல்லது இரண்டையும் கூட பாதிக்கலாம்.

அல்வியோலி என்று அழைக்கக்கூடிய நுரையீரல் காற்றுப்பைகளைத் தாக்கி திரவம் அல்லது சீழால் நிரப்பும்போது இந்த பாதிப்பு ஏற்படும்.

இதனால் ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுவாசப் பிரச்னை ஏற்படும்.

எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை அதிகம் தாக்கும்.

நிமோனியா வர என்ன காரணம்?
நிமோனியா வருவதற்கு வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்றவை முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து, நோய்க்கிருமிகளால் ஏற்படும் நீர்த்துளிகள் மூலம் இந்த நோய்த்தொற்று பரவலாம்.

அசுத்தமான இடங்களில் இருந்தோ அல்லது பொருட்களில் இருந்து கூட உங்களுக்கு நிமோனியா வர கூடும்.

வென்டிலேட்டர்கள் உதவியுடன் சிகிச்சை எடுத்துக் கொண்ட நபர்களும் இந்த தொற்றுக்கு ஆளாக நேரிடலாம்.

அறிகுறிகள்
சுவாசிக்கும்போதும், இருமும்போதும் மார்பு வலி
கபம் அல்லது சளியை உருவாக்கும் இருமல்
சோர்வு
பசியின்மை
காய்ச்சல்
வியர்வை
குமட்டல் மற்றும் வாந்தி வயிற்றுப்போக்கு
மூச்சுத் திணறல்

இந்த அறிகுறிகளை மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!

யாரெல்லாம் பாதிக்கப்படலாம்?
2 வயதிற்கு குறைவானவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கீமோதெரபி செய்பவர்கள், நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள், தொடர் மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு நிமோனியா விரைவில் தாக்கும்.

இவர்களுக்கு விரைவில் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே இரண்டு அல்லது மூன்று அறிகுறிகள் தென்பட்டாலே மருத்துவரை அணுகுவது நல்லது.

நிமோனியாவை கண்டறிவது எப்படி?
தொற்றுநோயையும் அதன் காரணத்தையும் கண்டறிய ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படலாம்.

இதுதவிர மார்பு பகுதியில் எக்ஸ் ரே எடுப்பது, சளியின் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி என்ன மாதிரியான தொற்று என அறிந்து கொள்ளலாம்.

நிமோனியாவின் கடுமையான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு ப்ரோன்கோஸ்கோபி என்ற இமேஜிங் சோதனை செய்யப்படுகிறது, இது நுரையீரலின் காற்றுப்பாதைகள் பற்றிய தெளிவான படத்தை எடுத்துக் கொடுக்கும்.

வீட்டில் சிகிச்சை முறைகள்
பூண்டை நசுக்கி நெஞ்சில் தடவலாம், அல்லது தினமும் ஒருமுறை பூண்டை அப்படியே சாப்பிடலாம்.

ஒரு கப் சூடான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.

தினமும் நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பருகலாம்.

வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கா? வெண் பூசணியை இப்படி சாப்பிடுங்க

நல்லெண்ணெய் உடன் மூன்று டேபிள் ஸ்பூன் கற்பூர எண்ணெய் கலந்து உறங்கும் முன் நெஞ்சில் தடவிக் கொள்ளலாம்.

தினமும் ஆப்பிள் பழம் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து செய்து குடிக்கலாம்.

கீரை, கேரட், பீட்ரூட் ஆகியவற்றின் ஜூஸ் நிமோனியாவை குணப்படுத்த உதவும்.