தளபதி 66 தமிழ் படமா, தெலுங்கு படமா?

விஜய்யின் அடுத்த படம் தளபதி 66 கடந்த வாரம் சென்னையில் பூஜை உடன் தொடங்கியது. படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி இருக்கும் ராஷ்மிகா பூஜையில் கொடுத்த ரியாக்ஷன் தான் அதிகம் வைரல் ஆகியது.

தளபதி 66

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் சென்டிமென்டுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என இயக்குனர் முன்பே கூறி இருந்தார்.

அதனால் குடும்ப ரசிகர்களை தளபதி66 அதிகம் கவரும் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தெலுங்கு படமா?

தளபதி66 படத்தை தயாரிக்கும் தில் ராஜூ தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர், அதே போல இயக்குனரும் தெலுங்கு என்பதால் இந்த படம் தெலுங்கு படம் தான் என அனைவரும் நினைக்கின்றனர். அது உண்மையா என சன் டிவி பேட்டியில் விஜய்யிடம் நெல்சன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த விஜய் “இது தமிழ் படம் தான். அவர்கள் ஒரு நேரடி தமிழ் படம் எடுக்க வேண்டும் என்று தான் விரும்பினார்கள். வழக்கம்போல தமிழில் எடுக்கப்பட்டு அதன் பின் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்” என விஜய் கூறி உள்ளார்.