உலகத்தில் தேன் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இது சுவையில் மட்டும் இல்லை, ஆரோக்கியமாக வாழ்வதற்கும் சிறந்த உதவி செய்கிறது. நமது முன்னோர்கள் வயிற்று வலி முதல் உடல் காயம் வரை அனைத்திற்கும் தேனை பயன்படுத்தியுள்ளனர்.
அதுபோல நமது முன்னோர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேனில் ஊறவைத்த பூண்டை சாப்பிட்டார்கள். தேனில் ஊறவைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
தேனில் ஊற வைத்த பூண்டு
தேன் இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இவற்றை மருந்தாக பயன்படுத்தலாம். தேனில் ஊறவைத்த பூண்டு தயாரிக்க தனித்தனியாக தோல் உரித்து எடுக்கப்பட்ட பூண்டு 20ஐ எடுத்து கொள்ளவும்.
தூய்மையான தேன் ஓர் பாட்டில் அளவு எடுத்துகொண்டு பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு அதில் ஊற வைக்கவும். பூண்டை தேனில் ஒரு வாரம் ஊறவிடுங்கள். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதும்.
நாள் ஒன்றிற்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும்?
இப்படி ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம். உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது.
பிறகு நண்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம். இந்த தேனில் ஊறவைத்த பூண்டு உடல் எடை அதிகரிக்க குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது. உடல் எடை குறைக்க தண்ணீரிலும் உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.