ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள்.
நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு – கேது கிரகங்கள் பெரும்பாலும் கெடு பலன்களை மட்டும் தரக்கூடியன.
இந்த பதிவில் ராகு பகவானின் விரத முறையும், கேது பகவானின் விரத முறை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
ராகு பகவான் விரத முறை
ராகு திசை நடப்பவர்களும் ராகு தோஷம் உள்ளவர்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
அதிகாலையில் எழுந்து குளித்து காளி கோவிலுக்குச் சென்று வேப்ப எண்ணெய் விளக்கேற்றி, மந்தாரமலர் அர்ச்சனையும் உளுந்தினால் செய்த பலகாரமும் நிவேதனம் செய்ய வேண்டும்.
கோமேதகக் கல்லை ஆபரணங்களில் சேர்த்து அணிவதும் நல்ல பலன் தரும்.
நவக்கிரக சன்னதியில் வழிபட்டு, இந்த காயத்ரியை ஜபிக்க வேண்டும்.
நகத் வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாயக தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
கேது பகவான் விரத முறை
கேது திசை நடப்பவர்களும் கேது நீச்சமடைந்தவர்களும் இவ்விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம்.
செவ்வாயன்று அதிகாலை எழுந்து குளித்து விநாயகரை வணங்க வேண்டும். விநாயகர் கோவிலுக்குச் சென்று செவ்வலரி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுக்கட்டை, மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும்.
வைடூரியக்கல்லை ஆபரணத்தில் சேர்த்து அணியலாம்.
நவக்கிரகச் சன்னதியில் வழிபட்டு கேதுபகவானை வணங்கி, இந்த காயத்ரியை ஜபிக்க வேண்டும்.
அஸ்வத் வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி