இலங்கையர்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டியவர்கள் அல்ல என வெளிநாட்டு தம்பதியினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கை வந்த வெளிநாட்டு தம்பதியினர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். “நாங்கள் கடந்த ஒரு வருடமாக இலங்கையில் வாழ்ந்து வருகின்றோம்.
நாட்டு மக்கள் மிகவும் நெருக்கடியான ஒரு நிலைமைய எதிர்கொள்கின்றார்கள். நாங்கள் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் வரிசையில் நின்று எரிபொருள் பெறுகின்றோம். நேற்று எனது கணவர் பல மணி நேரம் வரிசையில் நின்றார். இறுதி நேரத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதாக கூறி மூடிவிட்டார்கள்.
தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மிகவும் கவலைக்குரியது. இவ்வளவு அழகான ஒரு நாடு இந்த அளவு மோசமான நிலைமையை எதிர்கொள்வதனை பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
இலங்கை மக்கள் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியவர்கள் அல்ல. நாங்கள் இலங்கையை மிகவும் நேசிக்கின்றோம். மிகவும் அன்பான மக்கள்.
அரசியல்வாதிகளினால் நாடு இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளது. அரசியல் குறித்து கருத்து வெளியிடாமல் இருக்கவே விரும்புகின்றோம். எனினும் நாங்கள் அரசியல் குறித்து எந்த சிந்திக்கின்றோமோ அதனையே இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சிந்திப்பார்கள் என எங்களுக்கு தெரியும்.
நாங்கள் இந்த நாட்டு மக்களுடன் இருப்போம். எங்களால் இந்த நிலைமையை சமாளித்துக் கொள்ள முடியும். எனினும் வருமானமற்ற ஏழை மக்கள் மிகவும் துன்பப்படுகின்றார்கள்” என அந்த தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.