பரிசாக வந்த ரூ.18 கோடி மதிப்புள்ள நெக்லஸ் ஆபரணத்தை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தோற்றதால், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் வெளியேற்றப்பட்டார்.இதையடுத்து, புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரீஃப் பொறுப்பேற்றுள்ளார்.
அதன்படி, பிரதமராக இருந்தபோது, வெளிநாடு ஒன்றில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட நகையை இம்ரான் கான் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்கு பதிலாக ஒரு சில இலட்சங்களை மட்டுமே அவர் கரூவூலத்தில் வழங்கியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் சட்டப்படி, நாட்டின் தலைவர்கள், அதிகாரிகள் பெரும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்திடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அந்த பரிசை தங்களிடமே வைத்துக்கொள்ள விரும்பினால் பரிசின் மொத்த மதிப்பில் பாதித்தொகையை அரசுக்கு செலுத்தியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.