உயிரை பறிக்கும் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் சிறந்த பானம்

உயிரை கொல்லும் முக்கிய நோய்களில் நீரிழிவு நோய் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்கிறது – யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

ஆரம்பக்கட்டத்தில் இதனை கண்டறிந்து விட்டால் எளிதில் தீர்க்க முடியும். இதனை கட்டுக்குள் வைக்க நமது அன்றாட சமையலுக்கு பயன்படும் பூண்டு பெரிதும் உதவியாக இருக்கின்றது.

பூண்டில் ஆன்டி – ஆக்சிடண்ட், ஆன்டி – வைரல், ஆன்டி – ஃபங்கல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. அத்தகைய பூண்டை எப்படி பயன்படுத்தினால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் என்று பார்க்கலாம்.

​தேவையான பொருட்கள்

பூண்டு – 6 பல்
தண்ணீர் – 300 மில்லி
சீரகம் – ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில் 300 மில்லி தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் தோலுரித்து, ஒன்றிரண்டாகத் தட்டி வைத்திருக்கும் பூண்டையும் முழு சீரகத்தையும் அதில் போட்டு இரண்டு நிமிடங்கள் மட்டும் மிதமான தீயில் கொதிக்க வைத்து, பின் அடுப்பை அணைத்து விடுங்கள்.

அந்த பாத்திரத்தை ஒரு தட்டைப் போட்டு மூடி விடுங்கள். 15 நிமிடங்கள கழித்து மூடியைத் திறந்து பார்த்தால் பூண்டு சாறும் சீரகத்தின் தன்மையும் தண்ணீரிர் இறங்கியிருக்கும்.

பூண்டின் காரத்தன்மையும் வாசனையும் நிறைய பேருக்குப் பிடிக்காது. அதை மட்டுப்படுத்த தான் சீரகம் சேர்க்கிறோம். தேவையில்லையென்றால் சேர்க்க வேண்டாம்.

இந்த நீரை இப்போது வடிகட்டி காலையில் ஒரு கப் அளவுக்குக் குடிக்கலாம். வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது.

​நீரிழிவு நோயாளிகள் பெறும் பயன்கள்

பூண்டு இன்சுலின் சுரப்பை அதிகரிக்கக் கூடும்.

இன்சுலின் அதிகரிப்பு, இன்சுலின் உணர்திறன் மற்றும் இன்சுலின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரும் காரணியாக இருக்கும் அமினோ அமில ஹோமோசிஸ்டீனை குறைக்கிறது.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை மேம்படுத்த உதவுகிறது.

உயிரணுக்களின் மீள் உருவாக்கத்தை செயல்படுத்துவதால், கணையத்தின் பீட்டா செல்களை மேம்படுத்துகிறது.

டைப் 2 நீரிழிவு நோயாளிகள், தினமும் காலையில் பூண்டு நீர் எடுத்துக் கொள்வது நல்லது.