தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விஷால். அண்மையில், நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
சமீபத்தில், வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது.
அதனை தொடர்ந்து விஷால், வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையில், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தோஷமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “இதைவிட என்ன கேட்டு விட முடியும். மீண்டும் மாமாவாகியுள்ளேன் என்பதில் பெருமகிழ்ச்சி. எனது இளவரசி தங்கை ஐசுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
புதிய இளவரசியை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ் என்று தெரிவித்துள்ளார். பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.