பீஸ்ட் படத்தை புறந்தள்ளி கே.ஜி.எப்பிற்கு முன்னுரிமை கொடுத்த திரையரங்கம்

விஜய் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படம் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை.

இதனை தொடர்ந்து இன்று யாஷ் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் கே.ஜி.எப் 2. யாஷ் நடிப்பில் வெளிவந்த இப்படம் தமிழகத்தில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழகத்தில் முதல் நாளான இன்று 250 திரையரங்கங்களில் மட்டுமே கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளிவந்திருந்தது.

அதிலும், மல்டிபிளேக்சில் மட்டுமே கே.ஜி.எப் திரைப்படம் இரண்டாவது மூன்றுவது திரைகளில் வெளிவந்திருந்தது.