வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா அது குறித்து அண்மையில் பதிவிட்டிருக்கின்றார்.
பாலிவுட்டில் சமீப காலமாகவே வாடகை தாய் மூலம் சமீப பெற்று வரும் கலாச்சாரம் வாடிக்கையாகி வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார்.
முன்னாள் உலக அழகி
இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
பிரியங்கா சோப்ராவை விட அவர் திருமணம் செய்த நிக் ஜோனஸ் 10 வயது சிறியவர். இதனால் இவர்களின் திருமணம் பலவிதமாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்று இருப்பதாக பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டிருந்தார்.
முதல் முறை மனம் திறந்த பிரியங்கா சோப்ரா
இந்த நிலையில் குழந்தை குறித்து முதல் முறை உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“எனது ஆசைகள், அச்சங்கள், என் வளர்ப்பு ஆகியவற்றை என் குழந்தை என் நான் ஒருபோதும் திணிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.
குழந்தைகள் உங்களிடமிருந்து வரவில்லை என்று நான் எப்போதும் நம்பினேன். இது என் குழந்தை, நான் எல்லாவற்றையும் வடிவமைப்பேன் போன்ற நம்பிக்கைகள் எனக்கு இல்லை.
அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை கண்டுபிடித்து உருவாக்க உங்கள் மூலம் வருகிறார்கள். இது உண்மையில் எனக்கு உதவியது என்பதை உணர்ந்தேன் . என் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட வழியில் மிகவும் நியாயமற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.